Monday, August 21, 2017

புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                         உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                             அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                     பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 
                                                                                           - பெரிய புராணம் 
                             
                புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம் 

                                                     சிவபாதசேகரன் 

ஆலய பூஜை என்பது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டியதாகும். தன்னை முழுதுமாக அர்ப்பணித்துப்  பிரதி பலனை எதிர் நோக்காமல், உலக நலனுக்காகச் செய்யப்படவேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றவே தலைமுறை தலைமுறையாக ஆதிசைவ குலம் அத் தொண்டினைச்  செய்து வருகிறது. வாழையடி வாழையாக இறைத்தொண்டை எந்த விதமான சோதனை வந்தாலும் விட்டு விடக்கூடாது என்று வைராக்கியத்துடன் அசௌகரியங்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் முப்போதும் திருமேனி தீண்டிக்  குறைவற நித்திய பூஜைகள் செய்யக் கடமைப் பட்டகுலம் அது. 

Adhi Saiva community has been at the dedicated service by doing Parartha puja in Shiva Temples for centuries with the only aim to pray God for the welfare of the Whole World. Despite hurdles that come on the way, they continue to stick to this noble service regardless of very poor income.

இந்தக் காலம் போல எக்காலத்தும் பல சோதனைகளைக் கடந்து தன்  கடமையைச் செய்துவரும் ஆதிசைவர்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் குறைந்து போயிருக்கக் கூடும். ஆனால் சீரிய எண்ணத்தில் என்றுமே குறையக் கூடாது. இது ஒரு சோதனைக் காலம் தான். மாயைகள் பலவிதத்திலும் தங்கள் சக்தியால் செயலிழக்கச் செய்யும் என்பதும் உண்மை. கலை ஞானம் கல்லாமே கல்லாலின் கீழிருந்து கற்பித்த கடவுளை அன்றி வேறு எந்தத் தெய்வத்திடமும் சிந்தை செலுத்தாமல், மானுடர்களின் ஆசை வார்த்தைகளிலும், மாயைகளிலும் சிக்காமல் வாழ்வது என்பது மிகக் கடினம்தான். 


Their number has certainly dwindled but their dedication still remains. At a time when luxurious life style has literally swarmed the whole world, it becomes extremely difficult for them to remain secluded from these "worldly pleasures "


ஆலயங்கள் அரசர்களாலும்,இறை நம்பிக்கை உள்ளவர்களாலும் பராமரிக்கப்பட்டு வந்த காலத்தில் ஆதி சைவப் பரம்பரைகள் சிறு கிராமங்களிலும் குறைவற வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். மானியங்கள் உரிய காலத்தில் வீடு தேடி வந்ததால் எதற்கும் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது. எப்பொழது அதற்குக் குந்தகம் ஏற்பட்டதோ அன்று முதல் அல்லல் வாழ்க்கை ஆரம்பமானது. மேலை நாட்டுக் கல்வியும்,நவீன சாதனங்களும் , பிறருக்கு நிகராக நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் நாடளாவி ஏற்பட்டு விட்டபோது இப்பரம்பரையும்  எப்படி விதி விலக்காக இருக்க முடியும்? 

Temples were built,renovated and managed by Kings and God fearing people by extending liberal contributions. The trouble strated when the dues meant from the temple lands were stopped abruptly for over six decades. Modern education and the desire to earn more has not spared this community to some extent.


ஆகமக் கல்வி கற்றவர்களையும் மேலை நாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர்கள் ஆசை காட்டிக் கூட்டிச் சென்று விடும்படி ஆகி விட்டது. கிராமங்களில் மக்கள் ஆதரவும் குன்றியமைக்கு முக்கிய காரணம், இறை நம்பிக்கையோடு தொண்டாற்றி வந்தவர்கள் இடம் பெயர்ந்து விட்டபடியால் தான். வாழ்வாதாரமே அபாய நிலைக்கு வந்து விட்டபடியால் வேறு வழியின்றி சிலர் பிழைப்புக்காகத் தமது உரிமைத் தொழிலைச் செய்யாமல் பிற வேலையைத் தேடிப்  போகும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. ஆலய பூஜை செய்பவர்களுக்கு அரசாங்கம் சில நூறுகளே சம்பளமாகத் தருவதால் அப்படிப்பட்டவர்களுக்குத் திருமணம் ஆவதில் தாமதம் ஆகிறது. 

Temples abroad even hire learned Sivacharyars and the better living standards do attract others as well. Those who remain at Homeland start looking for other professions. Neither the Government nor the society take care of them on compassionate grounds. To say the least, the poor status make them  remain as bachelors.

இந்தப் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்?  வெளி ஊர்களிலும்,நாடுகளிலும் வசிப்பவர்கள் மனம் வைத்தால் எவ்வளவோ ஆதி சைவக் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியும். மனம் வைப்பவர் சிலரே. ஊதாரித் தனமாகச் செலவு செய்யத் தயாராக இருக்கும் அவர்கள் இந்த சமூகத்திடம் இரக்கப் படுவது அவ்வளவு சுலபமல்ல. அரசாங்கத்திடம் சில நூறுகளை மட்டும் சம்பள உயர்வாகப்  போராடி வாங்கலாம். ஆனால் அந்த ஊதிய உயர்வு சில நாள் செலவுக்கு மட்டுமே துணையாக இருக்கும். ஆலயங்களுக்கு உரிய நெல் குத்தகையை மீட்டுத்தந்தால் சிப்பந்திகளுக்கும் வருவாய் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடியதா என்ன ?

Their living conditions can be improved by philanthropists at Home and abroad as the Government can raise their salary very little which can not meet the daily expenses.

விரக்தி அடைபவர்கள் , தற்கால சூழ் நிலையில் எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடும். அதற்குப் பிறகு யாராலும் அதை மாற்ற முடியாது. இழந்தது இழந்ததுதான்.  யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்று சொல்வது வேண்டுமானால் சுலபம். எந்த வித வருமானமே இல்லாத கிராமக் கோவில்களில் போய் எத்தனை நாட்கள் மற்றவர்களால் பணியாற்ற முடியும்? அதுவும் பரம்பரை பரம்பரையாக!! வீம்புக்காகப் பேசாமல் யதார்த்த நிலையைப்  புரிந்து கொண்டு தம்மாலான உதவியைச் செய்வதே அறிவுடைமை. 

Others can only offer themselves to become  archakas but it is very difficult for them to remain in rural areas where there is negligible income leave alone to live there permanently as the future  generations will not follow suit.
புகழ்த்துணை நாயனார் , மனைவியாருடன் 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்  நாயன்மார்களது சரித்திரம் நமக்குத் துணையாக இருந்து புரியாத பாடங்களைப் புரிய வைக்கின்றன. குடந்தைக்கு அண்மையில் உள்ள அரிசில் கரைப் புத்தூர் சிவாலயத்தில் பணி  புரிந்த ஆதி சைவரான புகழ்த்துணை நாயனாரது சரிதம் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக விளக்கும். கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஊரிலிருந்த அனைவரும் வெளியேறியும் பசியாலும் களைப்பாலும் அயர்வுற்ற புகழ்த்துணையாரும் அவர்தம் மனைவியாரும் மட்டுமே அவ்வூரை நீங்காதிருந்து இறை பணியைத் தொடர்ந்தனர். நாள் தோறும் அரிசிலாற்றில் தண்ணீர் முகந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒரு நாள் அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அயர்வு மிகுதியால் குடம் கையிலிருந்து நழுவி, இறைவனது திருமுடிமேல் விழுந்தது. பெருமான்  புகழ்த் துணை  நாயனாருக்கு அப்பஞ்ச காலத்தில் தினமும் படிக்காசு வைத்து அருளினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் சம்பந்தரும் இத்தலப் பதிகங்களில் இச்செய்தியைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். 


It is at this point of time, one can recall the dedication and sacrifice of Pugazhthunai Nayanar described in Periya puranam. He and his wife alone were left in the village called Arisikkaraiputhur near Kumbakonam when a severe famaine drove away the villagers to look for food. The Nayanar remained firm in his dedication by not leaving the Temple Puja at any cost. On a day when he was performing "Abhishekam "to Lord Shiva, he lost control due to hunger and giddiness and the water pot fell on The God Himself. In appreciation of his tireless service The God blessed him with a bowl full of Coins to take care of him until the famine was over. Saiva saints Sambandhar and Sundharar parise the Nayanar in their Hymns of this place.


ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று  புகழ்த்துணையாரது  குருபூஜை விமரிசையாகச்  சிவாலயங்களில் நடத்தப்பெற வேண்டும். நாயனாரது அளவுக்கு எவராலும் அந்த மாதிரி  சூழ்நிலையில் சிவ பூஜையைக் கைவிடாமல் செய்யும் மன உறுதி வருவது மிகக் கடினம். ஆனால் அவர் வாழ்க்கையே ஒரு பாடமாக அமைந்து எப்படிப்பட்ட துன்ப நிலை வந்தாலும் பெருமான் நம்மைக் கை விட மாட்டான் என்ற உறுதியோடு முப்போதும் சிவபூஜை செய்து வரும் ஆதி சைவர்களுக்கு அத்  தெய்வமே துணை நிற்கும்.  இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. 

The Nayanar's Gurupuja is held in the Tamil month of Avani and the star being Aayilyam. Though it shall be difficult for anybody to be as devoted as the Nayanar, others can rededicate themselves on this day and this act can purify them without doubt and lift them up. 



Friday, August 11, 2017

ஸ்ரீ தண்டபாணி சிவாசார்யாரின் சிவத்தொண்டு

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                                           உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                                           அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                                       பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.       
                                                                             - பெரிய புராணம்

ஆதிசைவகுலம் என்பது சிவபெருமான் ஒருவரையே முழுமுதற் கடவுளாகக் கொள்வதோடு, அப்பெருமானையே  குல தெய்வமாகவும்,இஷ்ட தெய்வமாகவும் கொண்டு, உலகம் உய்வதற்காகப் பரார்த்த பூஜையும்,  தம்மை மேலும் புனிதப்படுத்த ஆத்மார்த்த பூஜையும் மேற்கொண்டு, வாழையடி வாழையாக விளங்கி வருவதாகும்.  இளமை முதற்கொண்டே சிவாகமம் கற்ற பின்னர், மண வாழ்க்கை மேற்கொண்டு ஆசார்ய அபிஷேகம்,தீக்ஷை முதலான தகுதிகள் மூலம், பரமேசுவரனை முப்போதும் தீண்டும் நியமத்தை மேற்கொள்வதால் இவர்களை சிவாச்சாரியார்கள் என்றும், பிறருக்குத் தீக்ஷை செய்து வைக்கும் குருவானபடியால் குருக்கள் என்றும் மரியாதையோடு அழைக்கிறோம். 

நித்திய பூஜையைக்  காலம் தவறாது, நியமத்துடன் ஆகம வழிப்படி செய்பவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், நம்மால் சுவாமிக்கு இவ்வளவுதான் செய்ய முடிகிறதே , இன்னும் எவ்வளவோ செய்து பார்க்க வேண்டுமே என்று குறை படுபவர்களும் உண்டு. இத்தனைக்கும் எந்த வித பொருளாதார வசதி இல்லாமல் இருந்தும் பக்தி சிரத்தை மட்டும் கொஞ்சமும் மாறாதபடித் தொண்டு செய்பவர்களைப் பார்க்கிறோம்.  இப்படிப்பட்ட ஆதிசைவகுலத் தோன்றல்களுள் ஒருவர்தான்  நாம் இங்கு குறிப்பிடும் காலம்சென்ற தண்டபாணி சிவாசாரியார் அவர்கள்.

It has been the tradition of Sivacharya community to dedicate themselves for the worship of none other than Lord Shiva. After undergoing the study of Sivagamas for seven  years they undertake the responsibility of performing Pujas in their ancestral temples. They receive Siva Dheeksha and Acharya Abhishekam after getting married. It is with this  qualification they enter into Sanctum Sanctoram with the traditional dress by wearing Viboothi in their forehead and Rudrakshamala around their neck. Panchakshara Japam is a must for them and they chant Sri Rudram,Chamakam etc when they perform abhishekam to the Lord. Apart from performing Pararthapuja for the welfare of the World, they conduct Athmartha puja at Home. Regardless of the inconvenience, poverty and hardships, there are many Sivacharyars who simply dedicate their lives to keep up the unbroken tradition . It is with gratitude and respect we mention here the selfless service carried out by late Sri Dhandapani Sivacharyar of Thiruvavaduthurai. 


Sri Dhandapani Sivacharyar
திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர் ஆலயத்தில் பணிபுரிந்து வந்த இந்த அர்ச்சகர் , பெரிய கோயிலில் உச்சி காலத்தை முடித்துக்கொண்டு சைக்கிளில் நைவைத்யத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 2 மைல் தொலைவிலுள்ள திருக்கோழம்பம் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்திலும், அங்கிருந்து 2 மைல் சென்று பேராவூர் சிவாலயத்திலும், வழியிலுள்ள கறைக்கண்டம் சிவாலயத்திலும்  பூஜையை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 1/2 மணி அளவில் வீட்டுக்குத் திரும்புவார். பிறகு உணவு உண்டுவிட்டுச்  சிறிதே இளைப்பாறியவுடன், மாலை 5 மணிக்குப் பெரிய  கோயிலில் சாயரட்சை, தொடர்ந்து 7 மணி அளவில் இரண்டாம் காலம், 8 1/2 க்கு அர்த்த ஜாமம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். விழாக் காலங்களில் வேலைப்  பளு  கடினமாக இருக்கும்.   போகும் இடங்களில் எல்லாம் இவரே தரையை சுத்தப்படுத்தி விட்டு, சுவாமிக்கு தீபம் ஏற்றி ,ஆலயக் கிணற்றிலிருந்து அபிஷேகத்திற்கு நீரைத் தோளில் சுமந்து கொண்டு வருவதை எத்தனையோ முறை கண்டிருக்கிறோம். அந்த 85 வயதிலும் ஒரு முறை கூட அலுத்துக் கொண்டதில்லை. மழைக்காலத்தில்  சாலை முழுதும் சேறாகி இருக்கும். சைக்கிளில் இருந்து இறங்கித் தள்ளிக் கொண்டு தான் போவார். அந்தக் கோயில்களுக்குப் போவதால் வருமானம் எதுவும் சொல்லும்படியாக வராவிட்டாலும், " கோழம்பா" என்று சொன்னாலே செல்வம் என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறாரே என்ற நிறைவு கலந்த பதிலே அவரிடமிருந்து வரும். 

After conducting pujas at Sri Masilamaneeswara Swami Temple, Thiruvavaduthurai from dawn to noon, he used to go to nearby villages called Thiruk kozhambam, Peravur and Karaik Kandam for daily pujas. Although he had to do all types of jobs like cleaning the floor and bringing well water on his shoulder he never complained even once about the hardship he faced every day. As the road used to be slushy during rainy days, he had to get down from the cycle and drag the cycle from the slush and proceed. Though the remuneration for going to these places was negligible, he used to quote from Saint Appar's Thevaram Hymn on Thiruk Kozhambam saying that the chanting of Kozhambanatha's name itself would bring wealth. Such a determined and dedicated person he was even at the age of 85! He used to take food at 3.30 at  Home after his return from these places and get ready to go the main temple at 5 p.m. It had to be more tough for him when the work was more demanding during the annual festival.

திருக்கோழம்பநாதருக்குக் கும்பாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது நெடு நாள் கனவு 2000 -ம் ஆண்டில் நிறைவேறியது. பின்னர் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின்  குடமுழுக்கிலும் பங்கேற்றார் . திருவாவடுதுறை ஆதீன 23 வது ஆதீன மகா சந்நிதானம் , இவரது பணிகளைப்  பாராட்டி ருத்ராக்ஷமாலை,பதக்கம், சம்பாவனை ஆகியன அளித்துக் கௌரவித்துள்ளார்கள் . வறுமையின் பிடியில் இருந்தபோதிலும், ஈசனுக்குத் தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்ட இவரைப் போன்ற சிவாசார்யர்களை சைவ உலகம் போற்ற வேண்டும். பிரதிபலனை எதிர்பார்த்தே வாழும் மனிதர்களைக் கொண்ட இவ்வுலகில் இவரைப் போன்றவர்களுக்கு நன்றி செலுத்துவதே நாம் செய்யத்தக்க கைம்மாறு.  

His dream of witnessing the consecration at Thirukkozhambam and Thiruvavaduthurai came true and he was honoured by the then  Pontiff of Thiruvavaduthurai Adheenam for his meritorious service. Though reeling in poverty, he considered himself fortunate to serve the Lord till his end. It is the duty of all Saivites to remember such Sivacharyars with gratitude. We can not give back anything better than this.
                                          *******************
சிவாச்சார்யர்களால்  நடத்தப்பெறும் ருத்ராபிஷேகம், இம்மாதம் (9.8.2017) அன்று திருவாரூருக்கு அண்மையில் உள்ள மாங்குடி மீனாக்ஷி சமேத சுந்தரேசுவர சுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
மாங்குடியில் ருத்ராபிஷேகம்
Rudhrabhishekam was conducted at Sri Meenakshi Sametha Sri Sundhareswara Swami Temple at Mangudi near Thiruvarur on behalf of Sivacharyar community
***********************  
.

  

Tuesday, August 8, 2017

ஆகம சீலர்க்கோர் அம்மான்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்

உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,  

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்   

பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 

                                                                                               - பெரிய புராணம்

It is with great pleasure we welcome our readers to follow our new blog, " SHIVAGNI"  in which we aim to project the pearls from Shivagama , events/festivals held at various places, issues faced by Shivacharya community and attempts to improve their standard of living. We believe that this move can throw more light on the above topics with special focus on community development . For the benefit of those who can not read Tamil script, we thought of presenting the blog in bilingual form. Your suggestions on the published posts are always welcome. 

பாரத நாடு ஒரு புண்ணிய பூமி. எத்தனையோ மகரிஷிகளும்,மகான்களும் தோன்றி இதனை மேலும் புனிதப்படுத்தினார்கள். மக்களை நன்னெறிப்படுத்தினார்கள். செம்மையான பாதை அமைத்து உய்யும் வழியை எளிமைப் படுத்தி அருளினார்கள். வேதம் சொன்ன வழியில் நின்று ஆகமங்கள் காட்டிய நெறிமுறைகளை வகுத்துக் காட்டினார்கள். வேதத்தை வைதீகர்களும், ஆகமத்தை ஆதி சைவர்களும் பின்பற்றி உலகம் உய்வதற்காக வேள்விகள் செய்தும், ஆலய பூஜைகள் செய்தும் இன்றளவும் பணி  செய்து வருகிறார்கள்.  இவ்வாறு அடிப்படையான வேதத்தையும், ஆகமத்தையும் பேணி வரும் மரபினரை ஆதரிப்பதும், ஆலயங்களில் ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறச் செய்வதும் மக்களது தலையாய கடமை ஆகும். சிவாக்னி என்ற பெயரில் வெளிவரும் பதிவுகள், ஆகமங்கள் பற்றிய செய்தித் துளிகளும், ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும், ஆதி சைவ சிவாச்சார்யர்களது வாழ்வாதாரம் பற்றிய தகவல்களும் அடங்கியதாக இருக்கும். வழக்கம்போல் அன்பர்கள் வரவேற்பர் என நம்புகிறோம். எல்லாம் சிவன் செயல்.  

                           ஆகமம் ஆகி நிற்கும் இறைவன் 

ஆகமங்கள்  பரமேசுவனது ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று மாணிக்கவாசகர் அருளுவதை, "  உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் " என்றும், " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பதாலும் அறியலாம். பழம் பெரும் நூலான திருமந்திரமும் ஆகமச் சிறப்பைப் பேசுகிறது. இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்களையும் அவற்றைப் போதித்த ஆச்சார்யர்களின் பெயர்களையும் இங்கு தருகிறோம்:

காமிகாகமம் , யோகஜம்,சிந்தியம்,காரணாகமம்,அதம்,தீப்த ஆகமம், குஷ்மம்,சஹஸ்ர  ஆகமம், அம்சுமான் ஆகமம், சுப்ரபேதம், விஜயாகமம்,நிக்வாசம், ஸ்வயம்புவம், அனலம், வீராகமம், ரௌரவாகமம் ,மகுடாகமம், விமலாகமம், சந்திர ஞானம், முகபிம்பாகமம்,புரோத்திதாகமம்,லலிதாகமம், சித்தியாகமம், சந்தானாகமம், சர்வோக்தமம், பாரமேச்வரம்,கிரணாகமம், வாதுளாகமம்  என்பன சிவாகமங்களின் பெயர்கள்.

மேற்கண்ட ஆகமங்களை முறையே, தூர்வாச சிவாசாரியார், பிங்கள சிவாசாரியார், உக்ர ஜோதி சிவாசாரியார்,  கபோதக சிவாச்சார்யார், கண்ட சிவாச்சார்யார் , விஷ்ண கண்ட சிவாசாரியார், விதயர சிவாசாரியார், ராம கண்ட சிவாசாரியார், ஞானசிவ சிவாசாரியார், ஞான சங்கர சிவாசாரியார், சோம சம்பு சிவாசாரியார், பிரம்ம சம்பு சிவாசாரியார், த்ரி லோசன சிவாசாரியார், ராமநாத சிவாசாரியார், ஈசான சிவாசாரியார், வருண சிவாசாரியார்,பிரசாத சிவாசாரியார், அகோர சிவாசாரியார் ஆகியோர் அவற்றைப் போதித்தனர். 
                                                   தகவல்: ஆதிசைவ குல இளம் அர்ச்சகர் 
                                             ****************
ஆகமக் கோயில் 

நமக்குத் தெரிந்த வரை இந்த  இருபத்தெட்டு ஆகமங்களுக்கும் இருபத்தெட்டு சிவ லிங்கங்கள் அமைத்து ஆகமக் கோயில் இருக்கும் ஒரே இடம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிராகாரத்தில் உள்ளது . இதனை ஆகமம் படித்தவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும். ஆகம லிங்கங்களின் நடுவில் சுப்பிரமணியர், தேவியருடன்  நின்ற வண்ணம் தரிசனம் அளிக்கிறார். பிரம்மண்யத்தைக் காப்பதே தொழிலாகக் கொண்ட பெருமான்  இவ்வாறு காட்சியளிப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.  
                                         ******************

Saint Manikka vasagar describes Sivagama as the form of Lord Siva. As the 28  Agamas emerged from His five faces, He feels immensely happy and bless those who recite and follow them by coming close to them.  28 acharyars have propagated these Agamas (Kamikam to Vaadhulam). One should not miss to worship the Agama Lingas inside Vridha Gireeswara Swami Temple, Vridhachalam where Lord Subramanya is seen amidst the 28 Sivalingas as one who protects Vedhas and Agamas .  


சிவாசாரியார் ஊரில் இல்லாதபோது வேறு மரபினர் பூஜை செய்யாது சிவபெருமானே சிவாச்சாரியார்  உருவில் வந்து பூஜை செய்ததாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இதனைத்  தன்னைத் தான் பூஜித்தல் என்பார்கள். 

திருவையாறு,திருவிடைமருதூர் ,கஞ்சனூர் போன்ற தலங்களில் ஐதீக விழாவாக இந்நிகழ்ச்சி இன்றளவும் கொண்டாடப்படுகிறது.இதனால், ஆகமங்கள் மூலம் இறைவனைப் பூஜித்தால் உரிய பலன் விளையும் என்று அறியப்படுகிறது. 

There are places like Thiruvaiyaru,Thiruvidaimarudur and Kanjanur where Lord Shiva is said to have worshipped Himself by carrying out the rituals as prescribed in the Agamas in the absence of Sivacharyars. It shows the importance of Agamas to derive the desired results. 

சிவாகமங்கள் மூலம் ஆலயங்களில் நடைபெற வேண்டிய பூஜை முறைகள், விழாக்கள் முதலிய தகவல்களோடு, சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. அவற்றைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.

Sivagamas not only speak about the daily rituals in Temples and procedures for conducting festivals but also tell us elaborately on Saiva Sidhantha. We will present these aspects in the forthcoming posts.