எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் , தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்து அருள , அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.
- பெரிய புராணம்
ஆதிசைவகுலம் என்பது சிவபெருமான் ஒருவரையே முழுமுதற் கடவுளாகக் கொள்வதோடு, அப்பெருமானையே குல தெய்வமாகவும்,இஷ்ட தெய்வமாகவும் கொண்டு, உலகம் உய்வதற்காகப் பரார்த்த பூஜையும், தம்மை மேலும் புனிதப்படுத்த ஆத்மார்த்த பூஜையும் மேற்கொண்டு, வாழையடி வாழையாக விளங்கி வருவதாகும். இளமை முதற்கொண்டே சிவாகமம் கற்ற பின்னர், மண வாழ்க்கை மேற்கொண்டு ஆசார்ய அபிஷேகம்,தீக்ஷை முதலான தகுதிகள் மூலம், பரமேசுவரனை முப்போதும் தீண்டும் நியமத்தை மேற்கொள்வதால் இவர்களை சிவாச்சாரியார்கள் என்றும், பிறருக்குத் தீக்ஷை செய்து வைக்கும் குருவானபடியால் குருக்கள் என்றும் மரியாதையோடு அழைக்கிறோம்.
நித்திய பூஜையைக் காலம் தவறாது, நியமத்துடன் ஆகம வழிப்படி செய்பவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், நம்மால் சுவாமிக்கு இவ்வளவுதான் செய்ய முடிகிறதே , இன்னும் எவ்வளவோ செய்து பார்க்க வேண்டுமே என்று குறை படுபவர்களும் உண்டு. இத்தனைக்கும் எந்த வித பொருளாதார வசதி இல்லாமல் இருந்தும் பக்தி சிரத்தை மட்டும் கொஞ்சமும் மாறாதபடித் தொண்டு செய்பவர்களைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஆதிசைவகுலத் தோன்றல்களுள் ஒருவர்தான் நாம் இங்கு குறிப்பிடும் காலம்சென்ற தண்டபாணி சிவாசாரியார் அவர்கள்.
It has been the tradition of Sivacharya community to dedicate themselves for the worship of none other than Lord Shiva. After undergoing the study of Sivagamas for seven years they undertake the responsibility of performing Pujas in their ancestral temples. They receive Siva Dheeksha and Acharya Abhishekam after getting married. It is with this qualification they enter into Sanctum Sanctoram with the traditional dress by wearing Viboothi in their forehead and Rudrakshamala around their neck. Panchakshara Japam is a must for them and they chant Sri Rudram,Chamakam etc when they perform abhishekam to the Lord. Apart from performing Pararthapuja for the welfare of the World, they conduct Athmartha puja at Home. Regardless of the inconvenience, poverty and hardships, there are many Sivacharyars who simply dedicate their lives to keep up the unbroken tradition . It is with gratitude and respect we mention here the selfless service carried out by late Sri Dhandapani Sivacharyar of Thiruvavaduthurai.
திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர் ஆலயத்தில் பணிபுரிந்து வந்த இந்த அர்ச்சகர் , பெரிய கோயிலில் உச்சி காலத்தை முடித்துக்கொண்டு சைக்கிளில் நைவைத்யத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 2 மைல் தொலைவிலுள்ள திருக்கோழம்பம் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்திலும், அங்கிருந்து 2 மைல் சென்று பேராவூர் சிவாலயத்திலும், வழியிலுள்ள கறைக்கண்டம் சிவாலயத்திலும் பூஜையை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 1/2 மணி அளவில் வீட்டுக்குத் திரும்புவார். பிறகு உணவு உண்டுவிட்டுச் சிறிதே இளைப்பாறியவுடன், மாலை 5 மணிக்குப் பெரிய கோயிலில் சாயரட்சை, தொடர்ந்து 7 மணி அளவில் இரண்டாம் காலம், 8 1/2 க்கு அர்த்த ஜாமம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். விழாக் காலங்களில் வேலைப் பளு கடினமாக இருக்கும். போகும் இடங்களில் எல்லாம் இவரே தரையை சுத்தப்படுத்தி விட்டு, சுவாமிக்கு தீபம் ஏற்றி ,ஆலயக் கிணற்றிலிருந்து அபிஷேகத்திற்கு நீரைத் தோளில் சுமந்து கொண்டு வருவதை எத்தனையோ முறை கண்டிருக்கிறோம். அந்த 85 வயதிலும் ஒரு முறை கூட அலுத்துக் கொண்டதில்லை. மழைக்காலத்தில் சாலை முழுதும் சேறாகி இருக்கும். சைக்கிளில் இருந்து இறங்கித் தள்ளிக் கொண்டு தான் போவார். அந்தக் கோயில்களுக்குப் போவதால் வருமானம் எதுவும் சொல்லும்படியாக வராவிட்டாலும், " கோழம்பா" என்று சொன்னாலே செல்வம் என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறாரே என்ற நிறைவு கலந்த பதிலே அவரிடமிருந்து வரும்.
After conducting pujas at Sri Masilamaneeswara Swami Temple, Thiruvavaduthurai from dawn to noon, he used to go to nearby villages called Thiruk kozhambam, Peravur and Karaik Kandam for daily pujas. Although he had to do all types of jobs like cleaning the floor and bringing well water on his shoulder he never complained even once about the hardship he faced every day. As the road used to be slushy during rainy days, he had to get down from the cycle and drag the cycle from the slush and proceed. Though the remuneration for going to these places was negligible, he used to quote from Saint Appar's Thevaram Hymn on Thiruk Kozhambam saying that the chanting of Kozhambanatha's name itself would bring wealth. Such a determined and dedicated person he was even at the age of 85! He used to take food at 3.30 at Home after his return from these places and get ready to go the main temple at 5 p.m. It had to be more tough for him when the work was more demanding during the annual festival.
திருக்கோழம்பநாதருக்குக் கும்பாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது நெடு நாள் கனவு 2000 -ம் ஆண்டில் நிறைவேறியது. பின்னர் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கிலும் பங்கேற்றார் . திருவாவடுதுறை ஆதீன 23 வது ஆதீன மகா சந்நிதானம் , இவரது பணிகளைப் பாராட்டி ருத்ராக்ஷமாலை,பதக்கம், சம்பாவனை ஆகியன அளித்துக் கௌரவித்துள்ளார்கள் . வறுமையின் பிடியில் இருந்தபோதிலும், ஈசனுக்குத் தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்ட இவரைப் போன்ற சிவாசார்யர்களை சைவ உலகம் போற்ற வேண்டும். பிரதிபலனை எதிர்பார்த்தே வாழும் மனிதர்களைக் கொண்ட இவ்வுலகில் இவரைப் போன்றவர்களுக்கு நன்றி செலுத்துவதே நாம் செய்யத்தக்க கைம்மாறு.
His dream of witnessing the consecration at Thirukkozhambam and Thiruvavaduthurai came true and he was honoured by the then Pontiff of Thiruvavaduthurai Adheenam for his meritorious service. Though reeling in poverty, he considered himself fortunate to serve the Lord till his end. It is the duty of all Saivites to remember such Sivacharyars with gratitude. We can not give back anything better than this.
*******************
சிவாச்சார்யர்களால் நடத்தப்பெறும் ருத்ராபிஷேகம், இம்மாதம் (9.8.2017) அன்று திருவாரூருக்கு அண்மையில் உள்ள மாங்குடி மீனாக்ஷி சமேத சுந்தரேசுவர சுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
- பெரிய புராணம்
ஆதிசைவகுலம் என்பது சிவபெருமான் ஒருவரையே முழுமுதற் கடவுளாகக் கொள்வதோடு, அப்பெருமானையே குல தெய்வமாகவும்,இஷ்ட தெய்வமாகவும் கொண்டு, உலகம் உய்வதற்காகப் பரார்த்த பூஜையும், தம்மை மேலும் புனிதப்படுத்த ஆத்மார்த்த பூஜையும் மேற்கொண்டு, வாழையடி வாழையாக விளங்கி வருவதாகும். இளமை முதற்கொண்டே சிவாகமம் கற்ற பின்னர், மண வாழ்க்கை மேற்கொண்டு ஆசார்ய அபிஷேகம்,தீக்ஷை முதலான தகுதிகள் மூலம், பரமேசுவரனை முப்போதும் தீண்டும் நியமத்தை மேற்கொள்வதால் இவர்களை சிவாச்சாரியார்கள் என்றும், பிறருக்குத் தீக்ஷை செய்து வைக்கும் குருவானபடியால் குருக்கள் என்றும் மரியாதையோடு அழைக்கிறோம்.
நித்திய பூஜையைக் காலம் தவறாது, நியமத்துடன் ஆகம வழிப்படி செய்பவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், நம்மால் சுவாமிக்கு இவ்வளவுதான் செய்ய முடிகிறதே , இன்னும் எவ்வளவோ செய்து பார்க்க வேண்டுமே என்று குறை படுபவர்களும் உண்டு. இத்தனைக்கும் எந்த வித பொருளாதார வசதி இல்லாமல் இருந்தும் பக்தி சிரத்தை மட்டும் கொஞ்சமும் மாறாதபடித் தொண்டு செய்பவர்களைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஆதிசைவகுலத் தோன்றல்களுள் ஒருவர்தான் நாம் இங்கு குறிப்பிடும் காலம்சென்ற தண்டபாணி சிவாசாரியார் அவர்கள்.
It has been the tradition of Sivacharya community to dedicate themselves for the worship of none other than Lord Shiva. After undergoing the study of Sivagamas for seven years they undertake the responsibility of performing Pujas in their ancestral temples. They receive Siva Dheeksha and Acharya Abhishekam after getting married. It is with this qualification they enter into Sanctum Sanctoram with the traditional dress by wearing Viboothi in their forehead and Rudrakshamala around their neck. Panchakshara Japam is a must for them and they chant Sri Rudram,Chamakam etc when they perform abhishekam to the Lord. Apart from performing Pararthapuja for the welfare of the World, they conduct Athmartha puja at Home. Regardless of the inconvenience, poverty and hardships, there are many Sivacharyars who simply dedicate their lives to keep up the unbroken tradition . It is with gratitude and respect we mention here the selfless service carried out by late Sri Dhandapani Sivacharyar of Thiruvavaduthurai.
Sri Dhandapani Sivacharyar |
After conducting pujas at Sri Masilamaneeswara Swami Temple, Thiruvavaduthurai from dawn to noon, he used to go to nearby villages called Thiruk kozhambam, Peravur and Karaik Kandam for daily pujas. Although he had to do all types of jobs like cleaning the floor and bringing well water on his shoulder he never complained even once about the hardship he faced every day. As the road used to be slushy during rainy days, he had to get down from the cycle and drag the cycle from the slush and proceed. Though the remuneration for going to these places was negligible, he used to quote from Saint Appar's Thevaram Hymn on Thiruk Kozhambam saying that the chanting of Kozhambanatha's name itself would bring wealth. Such a determined and dedicated person he was even at the age of 85! He used to take food at 3.30 at Home after his return from these places and get ready to go the main temple at 5 p.m. It had to be more tough for him when the work was more demanding during the annual festival.
திருக்கோழம்பநாதருக்குக் கும்பாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது நெடு நாள் கனவு 2000 -ம் ஆண்டில் நிறைவேறியது. பின்னர் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கிலும் பங்கேற்றார் . திருவாவடுதுறை ஆதீன 23 வது ஆதீன மகா சந்நிதானம் , இவரது பணிகளைப் பாராட்டி ருத்ராக்ஷமாலை,பதக்கம், சம்பாவனை ஆகியன அளித்துக் கௌரவித்துள்ளார்கள் . வறுமையின் பிடியில் இருந்தபோதிலும், ஈசனுக்குத் தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்ட இவரைப் போன்ற சிவாசார்யர்களை சைவ உலகம் போற்ற வேண்டும். பிரதிபலனை எதிர்பார்த்தே வாழும் மனிதர்களைக் கொண்ட இவ்வுலகில் இவரைப் போன்றவர்களுக்கு நன்றி செலுத்துவதே நாம் செய்யத்தக்க கைம்மாறு.
His dream of witnessing the consecration at Thirukkozhambam and Thiruvavaduthurai came true and he was honoured by the then Pontiff of Thiruvavaduthurai Adheenam for his meritorious service. Though reeling in poverty, he considered himself fortunate to serve the Lord till his end. It is the duty of all Saivites to remember such Sivacharyars with gratitude. We can not give back anything better than this.
*******************
சிவாச்சார்யர்களால் நடத்தப்பெறும் ருத்ராபிஷேகம், இம்மாதம் (9.8.2017) அன்று திருவாரூருக்கு அண்மையில் உள்ள மாங்குடி மீனாக்ஷி சமேத சுந்தரேசுவர சுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
மாங்குடியில் ருத்ராபிஷேகம் Rudhrabhishekam was conducted at Sri Meenakshi Sametha Sri Sundhareswara Swami Temple at Mangudi near Thiruvarur on behalf of Sivacharyar community *********************** . |
https://pungampadi.blogspot.com/
ReplyDeletepungampadit@gmail.com
இறையன்புடையீர் வணக்கம்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது.
1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.
தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
ஆலயத்தின் அமைப்பு.:
இறைவன்:சொக்கநாதர்
இறைவி: மீனாட்சி அம்மன்
பிறசன்னதிகள்: தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர்
தலமரம்: வில்வம்
கன்னிமூலை கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளில் உற்சவர் இல்லை.
கோவிலின் மேற்குப்பகுதி சுவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தால் இடிந்துவிட்டது.
திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வரவேற்கிறோம்.