Tuesday, August 8, 2017

ஆகம சீலர்க்கோர் அம்மான்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்

உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,  

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்   

பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 

                                                                                               - பெரிய புராணம்

It is with great pleasure we welcome our readers to follow our new blog, " SHIVAGNI"  in which we aim to project the pearls from Shivagama , events/festivals held at various places, issues faced by Shivacharya community and attempts to improve their standard of living. We believe that this move can throw more light on the above topics with special focus on community development . For the benefit of those who can not read Tamil script, we thought of presenting the blog in bilingual form. Your suggestions on the published posts are always welcome. 

பாரத நாடு ஒரு புண்ணிய பூமி. எத்தனையோ மகரிஷிகளும்,மகான்களும் தோன்றி இதனை மேலும் புனிதப்படுத்தினார்கள். மக்களை நன்னெறிப்படுத்தினார்கள். செம்மையான பாதை அமைத்து உய்யும் வழியை எளிமைப் படுத்தி அருளினார்கள். வேதம் சொன்ன வழியில் நின்று ஆகமங்கள் காட்டிய நெறிமுறைகளை வகுத்துக் காட்டினார்கள். வேதத்தை வைதீகர்களும், ஆகமத்தை ஆதி சைவர்களும் பின்பற்றி உலகம் உய்வதற்காக வேள்விகள் செய்தும், ஆலய பூஜைகள் செய்தும் இன்றளவும் பணி  செய்து வருகிறார்கள்.  இவ்வாறு அடிப்படையான வேதத்தையும், ஆகமத்தையும் பேணி வரும் மரபினரை ஆதரிப்பதும், ஆலயங்களில் ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறச் செய்வதும் மக்களது தலையாய கடமை ஆகும். சிவாக்னி என்ற பெயரில் வெளிவரும் பதிவுகள், ஆகமங்கள் பற்றிய செய்தித் துளிகளும், ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும், ஆதி சைவ சிவாச்சார்யர்களது வாழ்வாதாரம் பற்றிய தகவல்களும் அடங்கியதாக இருக்கும். வழக்கம்போல் அன்பர்கள் வரவேற்பர் என நம்புகிறோம். எல்லாம் சிவன் செயல்.  

                           ஆகமம் ஆகி நிற்கும் இறைவன் 

ஆகமங்கள்  பரமேசுவனது ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று மாணிக்கவாசகர் அருளுவதை, "  உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் " என்றும், " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பதாலும் அறியலாம். பழம் பெரும் நூலான திருமந்திரமும் ஆகமச் சிறப்பைப் பேசுகிறது. இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்களையும் அவற்றைப் போதித்த ஆச்சார்யர்களின் பெயர்களையும் இங்கு தருகிறோம்:

காமிகாகமம் , யோகஜம்,சிந்தியம்,காரணாகமம்,அதம்,தீப்த ஆகமம், குஷ்மம்,சஹஸ்ர  ஆகமம், அம்சுமான் ஆகமம், சுப்ரபேதம், விஜயாகமம்,நிக்வாசம், ஸ்வயம்புவம், அனலம், வீராகமம், ரௌரவாகமம் ,மகுடாகமம், விமலாகமம், சந்திர ஞானம், முகபிம்பாகமம்,புரோத்திதாகமம்,லலிதாகமம், சித்தியாகமம், சந்தானாகமம், சர்வோக்தமம், பாரமேச்வரம்,கிரணாகமம், வாதுளாகமம்  என்பன சிவாகமங்களின் பெயர்கள்.

மேற்கண்ட ஆகமங்களை முறையே, தூர்வாச சிவாசாரியார், பிங்கள சிவாசாரியார், உக்ர ஜோதி சிவாசாரியார்,  கபோதக சிவாச்சார்யார், கண்ட சிவாச்சார்யார் , விஷ்ண கண்ட சிவாசாரியார், விதயர சிவாசாரியார், ராம கண்ட சிவாசாரியார், ஞானசிவ சிவாசாரியார், ஞான சங்கர சிவாசாரியார், சோம சம்பு சிவாசாரியார், பிரம்ம சம்பு சிவாசாரியார், த்ரி லோசன சிவாசாரியார், ராமநாத சிவாசாரியார், ஈசான சிவாசாரியார், வருண சிவாசாரியார்,பிரசாத சிவாசாரியார், அகோர சிவாசாரியார் ஆகியோர் அவற்றைப் போதித்தனர். 
                                                   தகவல்: ஆதிசைவ குல இளம் அர்ச்சகர் 
                                             ****************
ஆகமக் கோயில் 

நமக்குத் தெரிந்த வரை இந்த  இருபத்தெட்டு ஆகமங்களுக்கும் இருபத்தெட்டு சிவ லிங்கங்கள் அமைத்து ஆகமக் கோயில் இருக்கும் ஒரே இடம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிராகாரத்தில் உள்ளது . இதனை ஆகமம் படித்தவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும். ஆகம லிங்கங்களின் நடுவில் சுப்பிரமணியர், தேவியருடன்  நின்ற வண்ணம் தரிசனம் அளிக்கிறார். பிரம்மண்யத்தைக் காப்பதே தொழிலாகக் கொண்ட பெருமான்  இவ்வாறு காட்சியளிப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.  
                                         ******************

Saint Manikka vasagar describes Sivagama as the form of Lord Siva. As the 28  Agamas emerged from His five faces, He feels immensely happy and bless those who recite and follow them by coming close to them.  28 acharyars have propagated these Agamas (Kamikam to Vaadhulam). One should not miss to worship the Agama Lingas inside Vridha Gireeswara Swami Temple, Vridhachalam where Lord Subramanya is seen amidst the 28 Sivalingas as one who protects Vedhas and Agamas .  


சிவாசாரியார் ஊரில் இல்லாதபோது வேறு மரபினர் பூஜை செய்யாது சிவபெருமானே சிவாச்சாரியார்  உருவில் வந்து பூஜை செய்ததாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இதனைத்  தன்னைத் தான் பூஜித்தல் என்பார்கள். 

திருவையாறு,திருவிடைமருதூர் ,கஞ்சனூர் போன்ற தலங்களில் ஐதீக விழாவாக இந்நிகழ்ச்சி இன்றளவும் கொண்டாடப்படுகிறது.இதனால், ஆகமங்கள் மூலம் இறைவனைப் பூஜித்தால் உரிய பலன் விளையும் என்று அறியப்படுகிறது. 

There are places like Thiruvaiyaru,Thiruvidaimarudur and Kanjanur where Lord Shiva is said to have worshipped Himself by carrying out the rituals as prescribed in the Agamas in the absence of Sivacharyars. It shows the importance of Agamas to derive the desired results. 

சிவாகமங்கள் மூலம் ஆலயங்களில் நடைபெற வேண்டிய பூஜை முறைகள், விழாக்கள் முதலிய தகவல்களோடு, சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. அவற்றைப் பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.

Sivagamas not only speak about the daily rituals in Temples and procedures for conducting festivals but also tell us elaborately on Saiva Sidhantha. We will present these aspects in the forthcoming posts.

2 comments:

 1. எம்பெருமானின் திருவருளால் தங்கள் சிவ பனி மென்மேலும் மேன்மை அடைய திருவருள் துணை நிற்க பிரார்திக்கிறன்,திருச்சிற்றம்பலம்.

  வேதமோடு ஆகமம் மெய் ஆம் இறைவன் நூல்
  ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
  நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்
  பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

  திருமந்திரம்

  ReplyDelete
 2. Superb and most important task is to restore the community who are serving the divine work of Nitya pujas in shivalayas.

  ReplyDelete