Monday, August 21, 2017

புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                         உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                             அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                     பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து. 
                                                                                           - பெரிய புராணம் 
                             
                புகழ்த்துணை நாயனார் சரிதம் தரும் பாடம் 

                                                     சிவபாதசேகரன் 

ஆலய பூஜை என்பது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டியதாகும். தன்னை முழுதுமாக அர்ப்பணித்துப்  பிரதி பலனை எதிர் நோக்காமல், உலக நலனுக்காகச் செய்யப்படவேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றவே தலைமுறை தலைமுறையாக ஆதிசைவ குலம் அத் தொண்டினைச்  செய்து வருகிறது. வாழையடி வாழையாக இறைத்தொண்டை எந்த விதமான சோதனை வந்தாலும் விட்டு விடக்கூடாது என்று வைராக்கியத்துடன் அசௌகரியங்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் முப்போதும் திருமேனி தீண்டிக்  குறைவற நித்திய பூஜைகள் செய்யக் கடமைப் பட்டகுலம் அது. 

Adhi Saiva community has been at the dedicated service by doing Parartha puja in Shiva Temples for centuries with the only aim to pray God for the welfare of the Whole World. Despite hurdles that come on the way, they continue to stick to this noble service regardless of very poor income.

இந்தக் காலம் போல எக்காலத்தும் பல சோதனைகளைக் கடந்து தன்  கடமையைச் செய்துவரும் ஆதிசைவர்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் குறைந்து போயிருக்கக் கூடும். ஆனால் சீரிய எண்ணத்தில் என்றுமே குறையக் கூடாது. இது ஒரு சோதனைக் காலம் தான். மாயைகள் பலவிதத்திலும் தங்கள் சக்தியால் செயலிழக்கச் செய்யும் என்பதும் உண்மை. கலை ஞானம் கல்லாமே கல்லாலின் கீழிருந்து கற்பித்த கடவுளை அன்றி வேறு எந்தத் தெய்வத்திடமும் சிந்தை செலுத்தாமல், மானுடர்களின் ஆசை வார்த்தைகளிலும், மாயைகளிலும் சிக்காமல் வாழ்வது என்பது மிகக் கடினம்தான். 


Their number has certainly dwindled but their dedication still remains. At a time when luxurious life style has literally swarmed the whole world, it becomes extremely difficult for them to remain secluded from these "worldly pleasures "


ஆலயங்கள் அரசர்களாலும்,இறை நம்பிக்கை உள்ளவர்களாலும் பராமரிக்கப்பட்டு வந்த காலத்தில் ஆதி சைவப் பரம்பரைகள் சிறு கிராமங்களிலும் குறைவற வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். மானியங்கள் உரிய காலத்தில் வீடு தேடி வந்ததால் எதற்கும் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது. எப்பொழது அதற்குக் குந்தகம் ஏற்பட்டதோ அன்று முதல் அல்லல் வாழ்க்கை ஆரம்பமானது. மேலை நாட்டுக் கல்வியும்,நவீன சாதனங்களும் , பிறருக்கு நிகராக நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் நாடளாவி ஏற்பட்டு விட்டபோது இப்பரம்பரையும்  எப்படி விதி விலக்காக இருக்க முடியும்? 

Temples were built,renovated and managed by Kings and God fearing people by extending liberal contributions. The trouble strated when the dues meant from the temple lands were stopped abruptly for over six decades. Modern education and the desire to earn more has not spared this community to some extent.


ஆகமக் கல்வி கற்றவர்களையும் மேலை நாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர்கள் ஆசை காட்டிக் கூட்டிச் சென்று விடும்படி ஆகி விட்டது. கிராமங்களில் மக்கள் ஆதரவும் குன்றியமைக்கு முக்கிய காரணம், இறை நம்பிக்கையோடு தொண்டாற்றி வந்தவர்கள் இடம் பெயர்ந்து விட்டபடியால் தான். வாழ்வாதாரமே அபாய நிலைக்கு வந்து விட்டபடியால் வேறு வழியின்றி சிலர் பிழைப்புக்காகத் தமது உரிமைத் தொழிலைச் செய்யாமல் பிற வேலையைத் தேடிப்  போகும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. ஆலய பூஜை செய்பவர்களுக்கு அரசாங்கம் சில நூறுகளே சம்பளமாகத் தருவதால் அப்படிப்பட்டவர்களுக்குத் திருமணம் ஆவதில் தாமதம் ஆகிறது. 

Temples abroad even hire learned Sivacharyars and the better living standards do attract others as well. Those who remain at Homeland start looking for other professions. Neither the Government nor the society take care of them on compassionate grounds. To say the least, the poor status make them  remain as bachelors.

இந்தப் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்?  வெளி ஊர்களிலும்,நாடுகளிலும் வசிப்பவர்கள் மனம் வைத்தால் எவ்வளவோ ஆதி சைவக் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியும். மனம் வைப்பவர் சிலரே. ஊதாரித் தனமாகச் செலவு செய்யத் தயாராக இருக்கும் அவர்கள் இந்த சமூகத்திடம் இரக்கப் படுவது அவ்வளவு சுலபமல்ல. அரசாங்கத்திடம் சில நூறுகளை மட்டும் சம்பள உயர்வாகப்  போராடி வாங்கலாம். ஆனால் அந்த ஊதிய உயர்வு சில நாள் செலவுக்கு மட்டுமே துணையாக இருக்கும். ஆலயங்களுக்கு உரிய நெல் குத்தகையை மீட்டுத்தந்தால் சிப்பந்திகளுக்கும் வருவாய் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் அவ்வளவு சுலபமாக நடக்கக் கூடியதா என்ன ?

Their living conditions can be improved by philanthropists at Home and abroad as the Government can raise their salary very little which can not meet the daily expenses.

விரக்தி அடைபவர்கள் , தற்கால சூழ் நிலையில் எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடும். அதற்குப் பிறகு யாராலும் அதை மாற்ற முடியாது. இழந்தது இழந்ததுதான்.  யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்று சொல்வது வேண்டுமானால் சுலபம். எந்த வித வருமானமே இல்லாத கிராமக் கோவில்களில் போய் எத்தனை நாட்கள் மற்றவர்களால் பணியாற்ற முடியும்? அதுவும் பரம்பரை பரம்பரையாக!! வீம்புக்காகப் பேசாமல் யதார்த்த நிலையைப்  புரிந்து கொண்டு தம்மாலான உதவியைச் செய்வதே அறிவுடைமை. 

Others can only offer themselves to become  archakas but it is very difficult for them to remain in rural areas where there is negligible income leave alone to live there permanently as the future  generations will not follow suit.
புகழ்த்துணை நாயனார் , மனைவியாருடன் 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்  நாயன்மார்களது சரித்திரம் நமக்குத் துணையாக இருந்து புரியாத பாடங்களைப் புரிய வைக்கின்றன. குடந்தைக்கு அண்மையில் உள்ள அரிசில் கரைப் புத்தூர் சிவாலயத்தில் பணி  புரிந்த ஆதி சைவரான புகழ்த்துணை நாயனாரது சரிதம் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக விளக்கும். கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஊரிலிருந்த அனைவரும் வெளியேறியும் பசியாலும் களைப்பாலும் அயர்வுற்ற புகழ்த்துணையாரும் அவர்தம் மனைவியாரும் மட்டுமே அவ்வூரை நீங்காதிருந்து இறை பணியைத் தொடர்ந்தனர். நாள் தோறும் அரிசிலாற்றில் தண்ணீர் முகந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒரு நாள் அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அயர்வு மிகுதியால் குடம் கையிலிருந்து நழுவி, இறைவனது திருமுடிமேல் விழுந்தது. பெருமான்  புகழ்த் துணை  நாயனாருக்கு அப்பஞ்ச காலத்தில் தினமும் படிக்காசு வைத்து அருளினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் சம்பந்தரும் இத்தலப் பதிகங்களில் இச்செய்தியைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். 


It is at this point of time, one can recall the dedication and sacrifice of Pugazhthunai Nayanar described in Periya puranam. He and his wife alone were left in the village called Arisikkaraiputhur near Kumbakonam when a severe famaine drove away the villagers to look for food. The Nayanar remained firm in his dedication by not leaving the Temple Puja at any cost. On a day when he was performing "Abhishekam "to Lord Shiva, he lost control due to hunger and giddiness and the water pot fell on The God Himself. In appreciation of his tireless service The God blessed him with a bowl full of Coins to take care of him until the famine was over. Saiva saints Sambandhar and Sundharar parise the Nayanar in their Hymns of this place.


ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று  புகழ்த்துணையாரது  குருபூஜை விமரிசையாகச்  சிவாலயங்களில் நடத்தப்பெற வேண்டும். நாயனாரது அளவுக்கு எவராலும் அந்த மாதிரி  சூழ்நிலையில் சிவ பூஜையைக் கைவிடாமல் செய்யும் மன உறுதி வருவது மிகக் கடினம். ஆனால் அவர் வாழ்க்கையே ஒரு பாடமாக அமைந்து எப்படிப்பட்ட துன்ப நிலை வந்தாலும் பெருமான் நம்மைக் கை விட மாட்டான் என்ற உறுதியோடு முப்போதும் சிவபூஜை செய்து வரும் ஆதி சைவர்களுக்கு அத்  தெய்வமே துணை நிற்கும்.  இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. 

The Nayanar's Gurupuja is held in the Tamil month of Avani and the star being Aayilyam. Though it shall be difficult for anybody to be as devoted as the Nayanar, others can rededicate themselves on this day and this act can purify them without doubt and lift them up. 



3 comments:

  1. Sir, have you published any details of bank accounts/trusts (for Adishaiva pAThashAlas or other Adishaiva-related welfare causes)?

    ReplyDelete
  2. nobody should think that Lord Sivan intend to save and guard only his devotees. He considers His basic duty to feed all beings of the universe irrespective of the fact that the being works for its foo or not. That is how people do not work also able to get and eat food.
    His

    ReplyDelete